சந்தவாசல் அருகில் உள்ள நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான ஏழுமலையின் மகள் ராஜலட்சுமி (வயது 18) என்பவர் உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி எலி மருந்தை சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்து கிடந்தார். 

அவரை குடும்பத்தினர் மீட்டு சிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இளம்பெண் ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.