இசை நிகழ்ச்சி ஒன்றில் தன் தோழி மற்றொரு ஆணுக்கு முத்தமிடுவதைக் கண்ட ஒருவர், அந்த இளம்பெண்ணைக் கழுத்தறுத்துக் கொலை செய்தார்.
நியூயார்க்கைச் சேர்ந்த Brandon Clark (22)ம், இன்ஸ்டாகிராம் பிரபலமான Bianca Devins (17)ம் இணையத்தில் சந்தித்து நண்பர்களானவர்கள்.
ஒருநாள் இருவரும் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அப்போது Bianca, அலெக்ஸ் என்ற ஒரு நண்பருக்கு முத்தமிட்டிருக்கிறார். இது Clarkஐ கோபப்படுத்தியுள்ளது.
காரில் வீடு திரும்பும்போது, அது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் Clark. ஆனால், நாம் நண்பர்கள்தானே என்பது போல் பதிலளித்துள்ளார் Bianca.
ஆனால் Clark அவரை ஒருதலையாக காதலித்திருப்பாரோ என்னவோ, ஆத்திரமடைந்து, காரில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து Biancaவை தொண்டையில் குத்தியிருக்கிறார். (அவர் ஏற்கனவே திட்டமிட்டு காரில் கத்தி முதலான ஆயுதங்களை மறைத்துவைத்திருக்கிறார்) கிட்டத்தக்க Biancaவின் தலை தனியாக வந்துள்ளது.
Biancaவை பொலிசார் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
எனது பெயர் Brandon Clark, நான் என் காதலியைக் கொலை செய்துவிட்டேன், நீங்கள் வரும்போது என்னுடைய உயிரற்ற உடலைத்தான் பார்ப்பீர்கள் என்று கூறிய அந்த அழைப்பை ட்ரேஸ் செய்து பொலிசார் வந்துள்ளனர்.
வந்து பார்க்கும்போது கழுத்தறுபட்டு உயிரிழந்த நிலையில் Biancaவும், இரத்த வெள்ளத்தில் Clarkம் கிடந்துள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Clark பிழைத்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் Clarkக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது அவர் 25 ஆண்டுகள் சிறையில் செல்விட நேரிடலாம்.
Biancaவைக் கழுத்தறுத்துக் கொன்ற Clark, அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். அவை சமூக ஊடகங்களில் மற்றவர்களால் வேகமாக பகிரப்பட்டன. அவற்றை பரப்புவதை நிறுத்துமாறு பயனர்களை கேட்டுக்கொண்ட பொலிசார், அந்த படங்களை வைத்துத்தான் Biancaவை தேடிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகளை உடனடியாக அகற்றாததற்காக சமூக ஊடகங்கள் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.