மூன்றாவது திருமணத்திற்கு வந்த சிக்கல் குறித்து வனிதா விளக்கமளித்துள்ளார்.

Vaniththa About Marriage Controversy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு பீட்டரின் முதல் மனைவி அவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் என்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தற்போது வனிதா விளக்கம் அளித்துள்ளார்.

இதுபோன்ற பிரச்சினை வரும் என்பது நாங்கள் எதிர்பார்த்தது தான். பீட்டர் தன்னுடைய மனைவியை பிரிந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. உங்களிடம் பணம் பறிப்பதற்காக அவர் இவ்வாறு கூறி வருகிறார்.

ரூபாய் ஒரு கோடி கேட்டு பிளாக்மெயில் செய்து இருந்தார். இதனை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்.

சினிமாவில் ஏற்கனவே நான் இது போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். இது எங்கள் வாழ்க்கையை பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.