மகாவெலி கங்ககைக்கு குளிக்கச் சென்ற 19 வயதுடைய இளைஞர் காணாமல்போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரப்பத்தனையைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நண்பவர்களுடன் மகாவலி கங்கைக்கு குளிக்கச் சென்ற குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளதாகவும், கடற் படையினரின் உதவியுடன் குறித்த இளைஞர் தேடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை மீண்டும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.