"லிவிங் நாஸ்ட்ராடாமஸ்" என்று அடிக்கடி அழைக்கப்படும் பிரேசிலிய சித்த மருத்துவ நிபுணரான தோஸ் சலோம், தனது துல்லியமான கணிப்புகளால் மக்கள் மத்தியில் பிறபல்யம் அடைந்து வருகின்றார்.
பொதுவாகவே நாம் அறிந்த வரையில் இந்த உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் பல்வேறு தீர்க்கதரசிகளைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதில் பாபா வாங்கா நாஸ்ட்ராடாமஸ் போன்றோர் மிகவும் பிரபலமானவர்கள்.
இவர்களின் பல கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாம் நுழையும் போதும், தீர்கதரிசிகளின் அடுத்த ஆண்டுக்கான கணிப்புகள் பற்றி அறிந்துக்கொள்வதில் பலரும் ஆர்வம் காடடுவது வழக்கம்.
ஏற்கனவே நாம் பார்த்தவர்கள் எல்லாம் தங்கள் குறிப்புகளை வைத்துவிட்டு மரணித்துப்போனவர்கள் ஆனால் நாம் இப்போது பார்க்க இருக்கும் இவர் இன்னும் இறக்கவில்லை. வாழும் போதே நடக்கப்போவதை கணித்துக்கூறுவதால் தோஸ் சலோமின் கணிப்புக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
2024 ஆம் ஆண்டில், சிறுகோள் அச்சுறுத்தல் உட்பட தனது நான்கு கணிப்புகள் உண்மையாகிவிட்டதாக அவர் கூறினார்.இப்போது, சலோம் கூறியுள்ளார்.
மூன்றாம் உலகப் போர் எதிர்பார்த்ததை விட விரைவில் ஆரம்பிக்கலாம் என இவர் கணித்துள்ளார். கோவிட்-19 தொற்றுநோய், ட்விட்டரை எலோன் மஸ்க் கையகப்படுத்துதல் (இப்போது X) மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் ஆகியவற்றை 36 வயதான தோஸ் சலோம் துல்லியமாக கணித்தன் மூலம் மக்களின் நம்பிக்கைளை வென்றவர்.
இந்நிலையில் அடுத்த உலகளாவிய மோதல் தொழில்நுட்ப உலகில் இருந்து வெளிவரக்கூடும் என்று தோஸ் சலோம் உறுதியாக நம்புகின்றார். அவர் உலகளாவிய அமைப்புகளின் சரிவால் உலகப் போர் மூளும் என கணித்துள்ளார்.
டெய்லி ஸ்டாரிடம் பேசிய சலோம், உலகளவில், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவில் அதிகரித்து வரும் பதட்டங்களை, சாத்தியமான மோதலின் குறிகாட்டிகளாக சுட்டிக்காட்டியுள்ளார்.
"இது மனிதர்களின் போர் மட்டுமல்ல, இயந்திரங்களின் போர்" என்று சலோமி கூறினார். "ரஷ்யா உக்ரைனை நோக்கி ஆக்கிரமிப்பின் புதிய நிலைகளை எட்டியுள்ளது, டினிப்ரோ நகரை நோக்கி ஓரெஸ் ஹனி கே சூப்பர்சோனிக் ஏவுகணையை வீசியது.
அதே நேரத்தில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், 'எந்த நடவடிக்கையிலும்' தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சலோமியின் கூற்றுப்படி, வரவிருக்கும் போரின் அறிகுறிகள் போர்க்களத்தில் இருப்பதை விட ஆன்லைனில் அதிகமாக வெளிப்படும்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில், மனிதகுலம் "தொழில்நுட்பப் போரின்" தொடக்கத்தைக் காண முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது பாரிய மோதலுக்கு ஆரம்ப புள்ளியான தோஸ் சலோம் எச்சரித்துள்ளார்.