UPDATE 03: குவைத்தில் இருந்து நாட்டிற்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2036 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் இன்று இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 02: பாகிஸ்தானில் இருந்து நாட்டிற்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2035 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 01: கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.
அதற்கமைய இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1661 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 362 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதோடு, 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.