முடி உதிர்வு என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதை தீர்ப்பது சாதாரண விடயம் இல்லை. இதற்காக பலரும் பலவகையில் செலவு செய்து வருகின்றனர்.
ஆனால் இயற்கையில் கிடைக்கும் பல பொருட்களை வைத்து எமது கூந்தல் முதல் சருமம் வரை அனைத்தையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.
அந்த வகையில் முடி உதிர்வை குறைப்பதற்கு ரோஜா இதழ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
ரோஜாப்பூவில் பல நன்மைகள் காணப்படுகின்றது. உடலில் இருக்கும் அசுத்தங்களை விரட்ட ரோஜா இதழ்கள் பெரிதும் உதவுகிறது. இந்த இதழ்களில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகின்றது.
இதனால் உடல் எடையை விரைவில் கட்டுப்படுத்த உதவும். ரோஜா இதழ்களை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால் உச்சந்தலையில் நீண்ட நேரம் ஈரப்பதம் இருக்கும்.
இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ரோஜா பூவின் இதழ்களை நன்றாக அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைக்க வேண்டும்.
இந்த பேஸ்டை வாரத்தின் ஒரு முறை அல்லது இரண்டு முறை தலையில் தடவ வேண்டும். இது தவிர ரோஜா இதழ்களை ரோஸ் மேரி ஹேர் ஆயிலில் மென்மையான பேஸ்ட் செய்து, அந்த எண்ணெயுடன் கலந்து பூசி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.
ரோஜா இதழ்களில் இருந்து ஹேர் ஸ்ப்ரே செய்யலாம். இதைச் செய்ய, சில ரோஜா இதழ்களை இரண்டு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து, அதை எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கவும். இதை குளித்து முடித்தவுடன் அவ்வது குளிக்க முதல் தலையில் ஸ்ப்ரே செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.