7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒலுவில் பாலமுனை கல்முனை ஆகிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதானவர்களாவர்.
இதில் கைதான சந்தேக நபர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிந்தவூரில் கள்ளநோட்டுக்களுடன் மூவர் கைது
- Master Admin
- 16 March 2021
- (307)

தொடர்புடைய செய்திகள்
- 01 March 2021
- (1809)
O/L பரீட்சை எழுதும் சுனாமி பேபி!
- 15 March 2021
- (456)
நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களின்...
- 03 June 2024
- (154)
சந்தனத்தை எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் அ...
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.