பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மகனை மோசமான வார்த்தையால் விமர்சித்ததாக பாகிஸ்தானியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியும் மேகனும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியின் தாக்கம் ஓயமாட்டேன்கிறது.
ராஜ குடும்பத்தார் இனரீதியாக மேகனின் குழந்தையை விமர்சித்ததாக ஒரு புகார் அந்த பேட்டியில் ஹரி மேகன் தம்பதியரால் முன்வைக்கப்பட்டது.
அப்படியானால் ராஜ டுடும்பத்தார் இன வெறியர்களா என நேரடியாகவே இளவரசர் வில்லியமிடம் கேள்வியும் எழுப்பினர் ஊடகவியலாளர்கள்.
இந்நிலையில், இளவரசர் ஹரி இராணுவத்தில் இருந்தபோது, Ahmed Raza Khan என்னும் தன் சக வீரரை, அவர் பாகிஸ்தான் வம்சாவளியினர் என்பதால் மோசமான வார்த்தை ஒன்றைச் சொல்லி ஹரி விமர்சித்ததாக Ahmedஇன் தந்தை தெரிவித்துள்ளார்.
அவர் வேண்டுமானால் அப்படி கூறியிருக்கலாம், ஆனால் ராஜ குடும்பத்தினர் இன வெறியர்கள் அல்ல என்று கூறியுள்ளார் Ahmedஇன் தந்தையான Muhammad Yaqoob Khan Abbasi.
பிரித்தானிய மக்களோ, ராஜ குடும்பத்தினரோ இன வெறியர்கள் அல்ல என்று கூறியுள்ளார் Ahmedஇன் தந்தை.
2009ஆம் ஆண்டு, Ahmed Raza Khanஐ மோசமான வார்த்தை ஒன்றால் விமர்சித்ததற்காக ஹரி மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது.