கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் இப்போது பாபி சிம்ஹா இணைந்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் முக்கிய வரவாக பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா வரிசையாக எல்லா படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.