அமெரிக்காவில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கர்ப்பமடைந்த பெண்ணை பொலிசார் கைது செய்து

அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தின் பாராகௌல்டு பகுதியில் வசித்து வருபவர் பிரிட்டனி க்ரே. 23 வயதான இவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக, 14 வயது சிறுவன் ஒருவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருக்கிறார்.

இதைக் கண்ட நபர் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கிருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அதே ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒருவர் இதே போன்று குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவிற்கு போன் செய்து புகார் கூறியுள்ளார். அப்போது அவர் அந்த சிறுவன் பிரிட்டனி க்ரேவை வீட்டிற்கு அழைத்து வந்து, அதன் பின் அவரே வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாகவும் கூறியுள்ளார்.

 

 

இதையடுத்து இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, சிறுவனுடன் அவர் நெருக்கமாக இருந்தது மட்டுமின்றி, அவனால கர்ப்பமடைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவரை கைது செய்த பொலிசார், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். கடந்த வியாழக்கிழமை பிரிட்டனி க்ரே 5 ஆயிரம் டொலர் அபராதம் செலுத்திய பிறகே விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தொடர் விசாரணைக்கு பின்னரே சிறுவனுக்கும், இவருக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது, நடந்தது என்ன? என்பது குறித்த முழு விபரம் வெளிவரும்.