பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகளுடன் மாத்திரமன்றி அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுடனும் மிக நெருங்கிய வகையில் தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்வகையில், குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது.

அப்படி அதிர்ஷ்ட யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி பெண்கள் இயல்பாகவே சாகச இயல்புக்கும், சுதந்திர தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாராருக்கும் அடிமையாக இருப்பதை ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள்.
குரு பகவானின் ஆதிக்க்தில் பிறந்த இவர்கள் வாழ்வில் ஒருபோதும் பணத்துக்கும் செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.
இவர்கள் எப்போதும் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணம் தானகவே குவியும்.
ரிஷபம்
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த ரிஷப ராசி பெண்கள் பிறப்பிலேயே வசீகர தோற்றமும் பணத்தை ஈர்க்கும் காந்த ஆற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உலகத்து இன்பங்களுக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் அதிபதியாக இருக்கும் சுக்கிரனின் ஆசியால் இவர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஒருபோதும் பணத்துக்கு தட்ப்பாடு என்ற நிலையே இவர்களுக்கு இருக்காது.
இயல்பிலேயே மற்றவர்களை கவரும் வசீகர ஆற்றல் மாத்திரமன்றி சகல செல்வ செழிப்புகளையும் அனுபவிக்கும் பேரதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்த பெண்கள் கற்பனை ஆற்றலுக்கு அதிபதியான நெப்தியூன் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்கள் எப்போதும் அதிக கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் குருவின் ஆசி பெற்றவர்கள் என்பதால் வாழ்க்கை முழுவதும் சொகுசாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். குறைந்த முயற்சியிலேயே இவர்கள் வாழ்வில் பொருளாதாரத்தின் உச்சத்துக்கு செல்வார்கள்.
இந்த ராசி பெண்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் பணப்புலகம் அதிகமாகவே இருக்கும். இவர்களிடம் பிறப்பிலேயே பிரபஞ்சத்தின் ஆற்றல் நிறைந்திருக்கும்.
