திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 59). இவர் காந்திகிராம பல்கலைக்கழக வளர்ச்சி பிரிவில் துணை பதிவாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலையில் 6.30 மணிக்கு அவர் நடைபயிற்சி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், காந்திகிராம பல்கலைக்கழகம் அருகே ரெயில் தண்டவாளத்தில் அடைக்கலம் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் நடைபயிற்சி சென்றபோது தண்டவாளத்தை கடக்க முயன்றதில் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.