இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அடால பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவர், முல்லேரிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என  அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.