கனடாவில் தாய் மற்றும் மகளுக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது.
பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்திங்டன் மற்றும் அவர் மகள் அலெக்சா ஆகிய இருவரும் மருத்துவமனை ஊழியர்கள் ஆவார்கள்.
இருவரும் சேர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டிருந்தனர்.
லொட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை சேர்ந்து தேர்வு செய்வது அவர்களின் வழக்கம். இந்த நிலையில் தாய் - மகள் வாங்கிய லொட்டரிக்கு $500,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து தெரசா கூறுகையில், பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
முதலில் இதை என் கணவரிடம் கூறினேன், ஆனால் அவர் நம்பவே இல்லை. நான் பொய் சொல்வதாக நினைத்தார், பின்னரே நம்பினார்.
நானும், அலெக்சாவும் பயணம் செய்வது பாதுகாப்பாக மாறிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளோம்.
இதோடு வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்க திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.