மாட்ரிட்: 12 இன்ச் நீளகத்தியை எடுத்து அப்படியே கரகரவென அறுத்துத் தள்ளி விட்டார் அந்தப் பாடகர்.. ஸ்பெயினே ஆடிப் போய் விட்டது இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு.

அவர் அறுத்தது நண்பரோட மர்ம உறுப்பைத்தான். எல்லாம் எதற்காக தெரியுமா.. சோசியல் மீடியாவில் தான் வைரலாகி புகழ் பெற வேண்டும் என்ற கிறுக்குத்தனமான ஆசைதான் இதற்கெல்லாம் காரணமாம்.

சோசியல் மீடியா பைத்தியம் நாட்டில் அதிகரித்து விட்டது. எதையாவது செய்து லைக் வாங்க துடிக்கும் கூட்டம் அதிகரித்து விட்டது.

 டிக்டாக்

டிக்டாக்

முன்பு டிக்டாக் செய்து பைத்தியக்காரத்தனம் செய்து கொண்டிருந்தனர். தற்போது அதே போல ஏகப்பட்ட மீடியாக்கள் வந்து விட்டன. நல்ல வேளை இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்ததால் பலர் நிம்மதியாக இருக்கின்றனர். இப்படித்தான் ஸ்பெயின் நாட்டில் ஒரு நபர் பைத்தியக்காரத்தனமான காரியத்தை செய்துள்ளார். அவர் ஒரு ராப் பாடகர். தனது அறை நண்பரின் ஆணுறுப்பை, 12 இன்ச் நீளமுடைய கத்தியைக் கொடுத்து கத்தரித்து எடுத்து விட்டார்.

டீச்சர்

டீச்சர்

அந்த நபரின் பெயர் ஆரோன் பெல்ட்ரான். இவரும் இவரது அறை நண்பர் ஆண்ட்ரூ பிரீச்சும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஆண்ட்ரூ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து ஆசிரியராக இருப்பவர். இவரது ஆணுறுப்பை ஆரோன் வெட்டுவாராம்.. இதுதொடர்பாக யூடியூபில் ஆரோன் வீடியோ போடுவாராம். அதில் வருகிற வியூஸுக்கேற்ப ஆரோன், ஆண்ட்ரூவுக்குப் பணம் கொடுப்பார். இதுதான் டீல்.

 கத்தி

 

கத்தி

இந்த விபரீத விளையாட்டு இப்போது ஆரோனை ஜெயிலுக்குள் தள்ளி விட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்குமாம். ஆரோன் கத்தியை எடுத்து வெட்டிய பிறகு வலி தாங்க முடியாமல், ரத்தம் குபுகுபுவென கொப்பளிக்க துடித்துள்ளார் ஆண்ட்ரூ.

 

பரபரப்பு

பரபரப்பு

அவர் தனது ஆணுறுப்பை வெட்டிக் கொள்ள சம்மதிக்க இன்னொரு காரணமும் இருந்துள்ளது. அதாவது அவருக்கு தான் ஒரு ஆண் என்ற உணர்வே ஒருபோதும் இருந்தது இல்லையாம். ஆணுக்குரிய இயல்புகளே இல்லாமல் தான் இருப்பதாக அவர் கூறி வந்துள்ளார். இதனால்தான் ஆரோன் சொன்ன டீலுக்கு ஓகே சொன்னாராம். ஒரு கிறுக்கன்னா பரவாயில்லை.. இங்கே ரெண்டு பேருமே கிறுக்கர்களாக இருந்துள்ளனர். என்னத்த சொல்ல...!