தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இந்த லாக்டவுன் நேரத்தை உபயோகமான பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக வீட்டிலேயே விவசாயம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அனைவரும் வீட்டில் விவசாயம் செய்யலாம் என்பதை ஊக்குவித்தார்.

அதேபோல் சமீபத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இந்த நிலையில் சற்றுமுன் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தான் குழந்தையாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் கைக்குழந்தையாக இருக்கும் சமந்தாவை அவரது தாயார் தூக்கி வைத்திருப்பது போல் உள்ளது. மேலும் இதே புகைப்படத்தில் சமந்தாவின் இரு சகோதரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.