தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.