எண்கணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும்.

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... நீங்க எந்த திகதி? | Numerology Born On These Dates Are Kind Heartedஎண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது. 

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே மற்றவர்கள் மீது அதீக அன்ர் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் மனம் மிகவும் கருணை நிறைந்ததாக இருக்கும். 

அப்படி எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதீக கருணை உள்ளம் கொண்டவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 2

(அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள்)

அந்த திகதிகளில் பிறந்தவர்கள் சந்திரனுடன் ஆதிக்கம் கொண்டவர்கள் என்பதால்,  இயற்கையாகவே பச்சாதாபம் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களின் துன்பத்தை பார்த்து மனம் உருகும் குணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் அதிகம் உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... நீங்க எந்த திகதி? | Numerology Born On These Dates Are Kind Hearted

மற்றவர்களின் நிலையை அவர்கள் வெளிப்படையாக சொல்லாத போதும் புரிந்துக்கொள்ளும் தன்மை இவர்களுக்கு  இருக்கும்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட இவர்கள் தங்களுக்கு இல்லாத போதும் கொடுக்க நினைக்கும் நல்ல உள்ளத்தை நிச்சயம் கொண்டிருப்பார்கள்.

எண் 6

(அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள்)

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... நீங்க எந்த திகதி? | Numerology Born On These Dates Are Kind Hearted

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள். அதனால் அன்பான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களை பராமரிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். வலுவான பொறுப்புணர்வை இயல்பாகவே பெற்றிருப்பார்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சியடையும் சிறந்த குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

எண் 9

(அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள்)

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் தைரியத்தின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகின்றார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... நீங்க எந்த திகதி? | Numerology Born On These Dates Are Kind Hearted

இவர்கள் இரக்கமுள்ள தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு துணை நிற்பத்தில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.