தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்களை, நாய் ஒன்று விடாமல் குரைக்கும் சத்தம் ஈர்த்துள்ளது.

அந்த நாயை நோக்கிச் சென்றவர்கள், அது இருந்த இடத்தின் அருகில் சென்றபோது, இரண்டு கைகள் பனிக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு வேக வேகமாக அந்த இடத்தில் தோண்டியிருக்கிறார்கள்.

அப்போது இரண்டு பேர் பனிக்குள் புதைந்திருப்பதை அவர்கள் கண்டு, அவர்களை வெளியே எடுத்துள்ளார்கள்.

அவர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்ததோடு, குளிரால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா என்ற பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

மனிதனின் சிறந்த நண்பன் என்பதை அந்த நாய் தனது செயலால் நிரூபித்து அவர்கள் இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளது.

\