மகாராஷ்டிராவின் Washim மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் வசிக்கும் 229 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப் போவதாக ஜனவரி 27 அன்று அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் பள்ளி விடுதிக்குத் திரும்பினர்.

கோவிட் -19 தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு Washim, Degaon-ல் உள்ள பாவ்னா பப்ளிக் பள்ளியில், அதிகாரிகள் மாணவர்களை பரிசோதித்தனர், அதில் ஆரம்பத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

பின்னர் அனைத்து 327 மாணவர்களும் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 229 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் 151 மாணவர்கள் அமராவதியைச் சேர்ந்தவர்கள், 55 பேர் Yavatmal-ஐ சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் வாஷிம், ஹிங்கோலி, புல்தான் மற்றும் அகோலாவைச் சேர்ந்தவர்கள். அனைத்து மாணவர்களும் 5 முதல் 9-ஆம் வகுப்பு மாணர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் யாருக்கும் முன்னதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் இப்போது பள்ளியிலேயே சிகிச்சை பெற்று வருகினறனர்.

சோதனையில் எதிர்மறையான முடிவைப் பெற்ற மற்ற 98 மாணவர்களும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.

இந்நிலையில், Washim மாநிலம் ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.