பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய காஜல் பசுபதி ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இவர் நடன இயக்குனர் சாண்டியை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து அதன் பின்னர் ஒருசில ஆண்டுகளில் பிரிந்துவிட்டார். இந்த பிரிவுக்கு சாண்டி மீது தான் வைத்திருந்த அதீத அன்பு தான் காரணம் என்றும் தான் அவரை அன்பால் டார்ச்சர் செய்ததாகவும் அதனால் தான் இருவரும் பிரிய நேரிட்டது என்றும் பல பேட்டிகளில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் சாண்டி தனது மனைவியின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு வாழ்த்துக் கூறி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல கமெண்ட்டுகளை அளித்து வந்த நிலையில், ஒரு ரசிகர் சாண்டியின் மனைவியை காஜலுடன் ஒப்பிட்டுது அவதூறாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு நடிகை காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது, ‘தயவுசெய்து சாண்டி மற்றும் அவருடைய மனைவியை தனியாக விடுங்கள். எத்தனை முறைதான் நான் சொல்வது என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நாங்கள் பிரிந்ததற்கு காரணம் நான் தான். சாண்டி மீது ஒரு துளி கூட தவறு இல்லை. அவரை நிம்மதியாக நான் வைக்கவில்லை. நாங்கள் 2012 ஆம் ஆண்டே பிரிந்துவிட்டோம். எங்களுடைய விவாகரத்திற்கு சாண்டியின் மனைவி எந்த விதத்திலும் காரணம் இல்லை. மேலும் சாண்டி தற்போது எனக்கு கணவரும் இல்லை என்று பதிலளித்துள்ளார். காஜல் பசுபதியின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.