மக்கள் நீதி மய்ய கட்சியின் தொடக்க விழாவை அரங்க நிகழ்ச்சியாக நாளை காலை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள் அரங்கத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் மாலையில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்கிறார். அப்போது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? போன்ற முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி கட்சி தொடங்காத நிலையில், அவரை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு
- Master Admin
- 20 February 2021
- (383)
![](https://newstamizha.com/storage/app/news/85c836e04f3f43bde71d55cdf2d58398.png)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2021
- (458)
இன்று மேலும் 549 பேருக்கு கொரோனா: 713 பே...
- 28 December 2020
- (487)
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- 01 January 2021
- (246)
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் தமிழகத...
யாழ் ஓசை செய்திகள்
விடுதியில் நடந்த மூன்று கொலைகள்: மனுஷவின் நெருங்கிய சகா கைது
- 05 February 2025
உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்
- 05 February 2025
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
- 04 February 2025
நெல்லுக்கான உத்தரவாத விலை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
- 04 February 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம் : இறக்கப்பட்டது தேசிய கொடி
- 04 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.