முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக், அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ளது.

இது ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரதிபலிப்பாக வருகிறது.

சமூக வலைத்தளங்கள் இனி அவுஸ்ரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்த அந்நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவேண்டும் என்று அவுஸ்ரேலியாவில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டது.

இதன் காரணமாக பேஸ்புக்கில் எந்த ஒரு செய்திகளை படிக்கவும், பகிரவும் அவுஸ்ரேலிய பயனர்களுக்கு இன்று முதல் (வியாழக்கிழமை) தடை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளூர் மற்றும் உலகளாவிய செய்தி தளங்களின் பேஸ்புக் பக்கங்கள் கிடைக்கவில்லை என்பதைக் கண்டு அவுஸ்ரேலியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல அரசாங்க சுகாதார மற்றும் அவசர பக்கங்களும் தடுக்கப்பட்டன

அவுஸ்ரேலிய பத்திரிகையாளர்கள் பேஸ்புக்கில் செய்தி உள்ளடக்கத்தை தொடர்ந்து வெளியிடலாம், ஆனால் அதன் டமைன்கள் மற்றும் பதிவுகளை அவுஸ்ரேலிய பயணங்களால் பார்க்கவோ பகிரவோ முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய பயனர்கள் அவுஸ்ரேலிய அல்லது சர்வதேச செய்திகளைப் பகிர முடியாது. அதேபோல், அவுஸ்ரேலியாவுக்கு வெளியே உள்ள சர்வதேச பயனர்களும் அவுஸ்ரேலிய செய்திகளைப் பகிர முடியாது.

ஒவ்வொரு மாதமும் 17 மில்லியன் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், அவுஸ்ரேலிய பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.