நாக பாம்பு தீண்டியதில் ஆபத்தான நிலையில் யாழ்.பல்கலைகழக மாணவி வைத்தியசாலையில் அனுமதி..!
யாழ்.பல்கலைகழக 2ம் வருட மாணவி ஒருவர் நாக பாம்பு தீண்டி ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழாலையைச் சேர்ந்த சிவகுமாரன்- மிதுளா என்னும் பல்கலைக் கழக மாணவியே இவ்வாறு ஆபத்தான
நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
குறித்த மாணவி தனது வீட்டில் நேற்றுக் காலை சமையல் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் சமயல்
பொருட்களை தமது மாட்டிற்கு உணவாக வழங்க மாடு நின்ற கொட்டகைக்கு சென்ற சமயம்
அங்கே மறைந்திருந்த நாகம் தீண்டியுள்ளது. இதனையடுத்து உடனடியாக மாணவி தெல்லிப்பளழ
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.