பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்வில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் உயர் பதிவியில் இருக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கும்.

ஆனால் எல்லோருக்கும் அவ்வாறான வாழ்க்கை அமைவது கிடையாது. ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் உயர் பதவி வகிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இயல்பாகவே அதிகாரம் கொண்ட பதவியை ஈர்க்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Naturally Attract Powerஅப்படி இயல்பாகவே உயர் பதவியை தன்பால் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

இயல்பாகவே அதிகாரம் கொண்ட பதவியை ஈர்க்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Naturally Attract Powerமிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதி புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் சிறந்த பேச்சாற்றல் மற்றும் தலைமைத்துவ குணங்களால் மற்றவர்களை விரைவில் அடக்கியாளும் தன்மையை கொண்டிருப்பார்கள்.

இந்த ராசியினர் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் மற்றவர்களிடம் தனிப்பட்ட விடயங்களை ஒருபோதும் பகிர்ந்துக்கொள்ளும் குணம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் இந்த விசேட குணங்கள் இவர்கள் அதிகாரம் மிக்க பதவியை அடைவதற்கு காரணமாக அமைகின்றது.

துலாம்

இயல்பாகவே அதிகாரம் கொண்ட பதவியை ஈர்க்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Naturally Attract Power

துலா ராசியில் பிறந்தவர்கள்  அதிகாரம் செலுத்துவது மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் தாங்கள் திட்டமிட்டப்படி லட்சியங்களை அடைய வேண்டும் என்ற நோக்கில் உறுதியாக இருப்பார்கள்.

அதுமட்டுமன்றி ராஜ தந்திர குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். இவ்வாறான விசேட பண்புகளால் இவர்கள் அதிகாரம் கொண்ட பதவியை ஈர்க்கின்றார்கள்.

சிம்மம்

இயல்பாகவே அதிகாரம் கொண்ட பதவியை ஈர்க்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Naturally Attract Power

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களை  ஆளும் வகையிலான ஆளுமைகளை கொண்டிருப்பார்கள்.

இவர்களால் யாருக்கும் கட்டுபட்டு வாழ முடியாது. சுதந்திரத்தின் மீது இவர்களுக்கு தீராத மோகம் நிச்சயம் இருக்கும்.

பெரும்பாலும்  இவர்களின்  விசேட குணங்கள் இவர்களை அதிகாரத்தை நோக்கி ஈர்க்கின்றது. இவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் அதிகாரம் கொண்ட பதிவியில் தான் இருப்பார்கள்.