செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் தமிழ்நாடு ஓட்டல் பழைய கட்டிடம் உள்ளது. மரம், செடி, கொடிகள் அடர்ந்து காணப்படும் இந்த இடத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் பிணம் கிடந்தது.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பார்த்த போது குழந்தையின் உடல் விலங்குகளால் கடித்து குதறப்பட்டு உடல் சிதைந்து ரத்தம் கொட்டிய நிலையில் காணப்பட்டது.

உடல் சிதைந்து காணப்பட்டதால அது ஆண் குழந்தையா?, பெண் குழந்தையா? என்பது தெரியவில்லை. உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.