வான்வெளியில் மேக கூட்டங்கள் அழகாக காட்சியளிக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மும்பையில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அது அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் கலைஞர் பிரென்ட் ஷவ்நோர் என்பவரின் கற்பனையில் உருவான படம் என தெரியவந்துள்ளது. மேலும் அது புகைப்படமே இல்லே என்பதும் உறுதியாகி இருக்கிறது.
இதுபற்றிய இணைய தேடல்களில் இதே படம் கொண்ட பதிவுகள் இணையத்தில் காணக்கிடைத்தன. மேலும் பிரென்ட் ஷவ்நோர் பெயர் கொண்டவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இந்த படங்களை ஆகஸ்ட் 29, 2020 அன்று பதிவிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் மும்பை நகரில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலானது உண்மையான புகைப்படம் இல்லை என்பதும் அது டிஜிட்டல் வரைபடம் என்பதும் உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.