திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவயானி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த மாதம் 30-ந்தேதி வயலுக்கு சென்ற தேவயானி, அங்கு தண்ணீர் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை தண்ணீர் என்று நினைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உறவினர்கள் அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவயானி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.