நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியால் கடந்த செவ்வாய்க்கிழமை 115 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறித்த பணம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்குக் குறைந்த வட்டி அடிப்படையில் கடன்களை வழங்குவதற்காக அச்சிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் வங்கி அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தப் பொருளாளரால் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.