வவுனியா - செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) இரவு செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.