ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாயின் வலுவான நாடாளுமன்றத்தை உருவாக்கும் வகையில் மக்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டுமெதன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருணாகல் மெல்சிறிபுரவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
புதிய ஜனாதிபதி வேலை செய்யக் கூடியவர். அவரது திறமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும். இதனையே நாம் செய்ய வேண்டும்.
ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கடந்த நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்புகளை வழங்க முடியாமல் போனது.
எதிர்க்கட்சிகள் தற்போது கோஷம் போடுகின்றன. பல வருடங்கள் ஆட்சியில் இருந்து நாட்டுக்கு செய்த சேவை என்ன என்பதை புதிதாக கேட் வேண்டியதில்லை. அபிவிருத்தி நின்று போனது. பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடைந்தள்ளது. இந்த நிலைமைகளை மாற்ற வேண்டிய காலம் இப்பொழுது வந்துள்ளதென அவர் தெரிவித்தள்ளார்.