உலக அளவில் நேற்று ஒரு இலட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 89 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 400 பேர் மரணித்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 33 ஆயிரத்து 400 பேர் என அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

ஆனால் உயிரிழந்தவர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் பிரேசில் முதலிடத்திலும், 647 பேர் மரணித்ததால் மெக்ஸிகோ 2 ஆம் இடத்திலும், 573 பேர் உயிரிழந்ததால் அமெரிக்கா 3 ஆம் இடத்திலும், 307 பேர் உயிரிழந்துள்ளதால் இந்தியா 4 ஆம் இடத்திலும் உள்ளன.

இதேபோல் இங்கிலாந்து, பெரு, ஈரான், ரஷ்யா, சிலி, பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளில் மூன்றிலக்க எண்களில் இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் 47 லட்சத்து 33 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 37 லட்சத்து 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.