கேகாலை, கரவனெல்லை ஆதார வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான வைத்தியர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, வைத்தியசாலையின் 18 வைத்தியர்கள் மற்றும் 08 தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அனைத்து வார்டுகளும் வழமைப் போல் செயற்படுவதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசேல பெரேரா தெரிவித்தார்.