நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம், சாமிமலை மஹானிலு ஆகிய தோட்டங்களில் தலா ஒரு தொற்றாளர்கள் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனைய இரு தொற்றாளர்களும் மஸ்கெலியா நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் கொழும்பிலிருந்து வந்தர்களுடன் தொடர்புபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.