குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்கள் நால்வரை தவிர்ந்து தாதிகள் 8 பேர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.