தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் தகவல்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,32,415 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 713 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவில் இருந்து 8,14,811 பேர் குணமடைந்துள்ளனர். 5,314 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று தனியார் மருத்துவமனையில் 6 பேர், அரசு மருத்துவமனையில் 3 பேர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 12.290 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 60,249 மாதிரிகளும், 60,011 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,53,91,518 மாதிரிகளும், 1,50,82,351 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.