உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவர்களில் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியும் பெண் வீட்டு பராமரிப்பு உறுப்பினர் ஒருவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவு அறையில் உள்ள ஊழியர் ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்ள்கிழமை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட 100 பி.சி.ஆர் சோதனைகளில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மீதமுள்ள பணியாளர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் நாளை (வியாழக்கிழமை) நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.