வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று (19) அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே அவரது தலைப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த மரணம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.