பொதுவாக ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் குணத்துக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் எல்லா விடயங்களிலும் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என பார்க்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர்.
இவர்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு செய்யும் நன்மைகளை கூட சுயநலம் கருதியே செய்வார்களாம். இப்படி சுயநலனுக்காக எதையும் செய்யும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த ராசியினர் எப்போதும் தங்களின் கருத்துக்கு முக்கியதுவம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொரு விடயமும் சுயநலன் கருதியதாகவே இருக்கும். நண்பர்களுக்கு பணம் செலவழிக்கும் பழக்கம் இவர்களிடத்தில் சுத்தமாக இருக்காது.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தங்களின் சொந்த நலனுக்கு மாத்திரமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எவ்வளவு பாசமான மற்றும் அக்கறையான நண்பர்கள் கிடைத்தாலும் இவர்கள் சுயநலம் கருதியே பழகும் தன்மையை கொண்டிருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுவதால் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.