மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து கதை சொல்றேன்'. ஆறுமுக குமார் என்பவர் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை நிஹாரிகா. இந்த படம் மட்டுமன்றி சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி உள்பட மேலும் ஒரு சில படங்களிலும், ஒருசில வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நடிகை நிஹாரிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவர் ஐடி ஊழியர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனும் ஐடி துறையில் பணிபுரிந்து வருபவருமான வெங்கட சைதன்ய ஜோனாலகாடு (Venkata Chaitanya Jonnalagadda) என்பவர்தான் மணமகன் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை நிஹாரிகா தான் மணக்க இருக்கும் வெங்கட்டின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நிஹாரிகா ரசிகர்களும், திரையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது