சிறைச்சாலைகளுக்குள் நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து கடந்த பல வாரங்களில் 10 ஆயிரத்து 65 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்டவர்களில் 60 விகிதமானவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் என்றும் அவர்கள் சுகாதார நெறிமுறைகளைத் தொடர்ந்து விடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், விடுவிக்கப்பட்ட கைதிகள் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 4000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளும் ஐந்து இறப்புகளும் சிறைச்சாலையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.