திருப்பாச்சனூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பில்லூர், கொளத்தூர், காவணிப்பாக்கம், சித்தாத்தூர், சேர்ந்தனூர், புருஷானூர், ஆனாங்கூர், அத்தியூர்திருவாதி, தென்குச்சிப்பாளையம், திருப்பாச்சனூர், தளவானூர், வேலியம்பாக்கம், வி.அரியலூர், சாமிப்பேட்டை, பிள்ளையார்குப்பம், கொங்கரகொண்டான், ராமநாதபுரம், அரசமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.
