எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

 

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பவும் ஸ்டார்களாக தான் இருப்பார்களாம்- உங்க தேதி என்ன? | These Dates Born People Will Start Numerology

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் ஸ்டார்களாக தான் இருப்பார்கள் எனக் கூறப்படுகின்றது. அப்படியானவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

எண் 2 பிறந்தவர்கள்

  • எண் 2 ல் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு இணக்கமானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடன் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் குழுவாக சேர்ந்து வேலை பார்ப்பார்கள்.
  • எந்த சந்தர்ப்பத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்காம் அங்குள்ளவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களின் கொள்ளைகள் மாறாமல் பார்த்துக் கொள்வார்கள்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பவும் ஸ்டார்களாக தான் இருப்பார்களாம்- உங்க தேதி என்ன? | These Dates Born People Will Start Numerology

 

  • எண் 2 பிறந்தவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் மிகவும் கருணையுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
  • மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்வது போல் அவர்களுக்கு வரும் துன்பங்களையும் ஏற்றுக் கொள்வார்கள்.
  • தன்னலமற்ற முறையில் உதவிகளை செய்ய முன் வருவார்கள். அதே சமயம் உதவிக்கு எந்தவித கைமாறையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
  • மற்றவர்களையும் பார்க்க இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். 
  • சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கும் எண் 2 பிறந்தவர்கள் ஏழைகள், ஆதரவற்றோர், நோயாளிகள் போன்றோரை கண்டால் மனம் உடனே இரங்கிவிடுவார்கள்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பவும் ஸ்டார்களாக தான் இருப்பார்களாம்- உங்க தேதி என்ன? | These Dates Born People Will Start Numerology

 

  • எப்படியான நிலை வந்தாலும் சமூகத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.
  • விளம்பரம், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற துறைகளில் வெற்றி பெறுவார்கள். தங்களுக்குள் இருக்கும் திறமையால் இவர்கள் சாதிப்பதை யாராலும் தடுக்க முடியாது.
  • சினிமாவில் பிரபலமாக இருக்கும் அமிதாப் பச்சன், நடிகர் ஷாருக்கான், ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் எண் 2 ல் பிறந்தவர்களாக இருக்கின்றமையினால் இந்த எண்ணை லக் என அழைக்கிறார்கள்.
  • தன்னம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் இவர்களின் கருத்துக்களை மற்றவர்கள் அதிகம் மதிப்பார்கள். சொந்த திறமையினால் முன் நோக்கி வருவார்கள்.    

அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் நகைகள்

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பவும் ஸ்டார்களாக தான் இருப்பார்களாம்- உங்க தேதி என்ன? | These Dates Born People Will Start Numerology

எண் 2 ல் பிறந்தவர்களுக்கு பச்சை நிறம் அதிர்ஷ்டமானதாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் கிரீம் மற்றும் வெள்ளை நிறங்கள் வரை அணியலாம். 

மாறாக எண் 2 பிறந்தவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அடர் நிறங்களை அணியக் கூடாது. உதாரணமாக கருப்பு, ஊதா மற்றும் அடர் சிவப்பு நிறம்.

வெளிர் பச்சை கற்கள் இவர்களுக்கு ராசியானவையாக பார்க்கப்படுகின்றது.

jade எனப்படும் கற்களை இவர்கள் உடலை ஒட்டுவது போல் அணிந்து கொண்டால் நன்மை கிடைக்கும்.