அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜியார்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியை மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஒலிப்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒளிப்பதிவு தி வொஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட ஒரு மணி நேர தொலைபேசி அழைப்பு, தற்போது வைரலாக பரவிவருகின்றது.

ஜார்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்தது. இது பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

மேலும் அந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக சான்றளித்தது, இது ஜனவரி 6ஆம் திகதி காங்கிரஸால் அங்கீகரிக்கப்படும்.

இருப்பினும், ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் வெளியுறவுத்துறை செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் ஜியார்ஜியா மாநிலத்தில் தாம் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.

ஜியார்ஜியாவில் 11,779 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடனிடம் தோற்றதால் ட்ரம்ப் அந்த மாநிலத்தின் தேர்தல் வாக்குகளையும் இழந்தார். எனினும், அதற்கு அமைச்சர் பிராட் ராபென்ஸ்பெர்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கள்ள வாக்குகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் விளைவு ஆபத்தானதாக இருக்கும் என ட்ரம்ப் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் இதன் உண்மை நிலை குறித்து ஆராயப்படுகின்றது.