பொதுவாகவே கைக்கின் பின் இருக்கையானது முன் இருக்கையுடன் ஒப்பிடும் போது சற்று உயரமானதாக இருப்பதை அனைவருமே அவதானித்திருப்போம். ஏன் இவ்வாறு பைக்கின் பின் இருக்கையை உயரமாக வடிவமைக்கின்றார்கள் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?

பலரும் இது அழகுக்காக என்று நினைக்கின்றார்கள். இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பைக்கின் பின் இருக்கை ஏன் சற்று உயரமாக வடிவமைக்கப்படுகிறது? இவ்வளவு காரணம் இருக்கா! | Why Motorcycle Back Seats Higher Than Front Seats

பின் இருக்கையானது பைக்கின் சமநிலை மற்றும் வடிவமைப்பு ஆகிய இரண்டிலும் தாக்கம் செலுத்துகின்றது. அதாவது பொதுவாக இரு சக்கரங்களுக்கு இடையில் சமநிலை இருக்க, பைக்கில் அமர்ந்திருக்கும் இருவரின் எடை சரியாக மையத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

பைக்கின் பின் இருக்கை ஏன் சற்று உயரமாக வடிவமைக்கப்படுகிறது? இவ்வளவு காரணம் இருக்கா! | Why Motorcycle Back Seats Higher Than Front Seats

பின் இருக்கை சற்று உயரமாக இருந்தால், பின்னால் அமர்ந்திருப்பவர் சற்று முன்னோக்கி சாய்ந்து உட்கார வேண்டிய தேவை தோற்றுவிக்கப்படுகின்றது.

இதனால் உடலுக்கு ஏற்படும் அதிர்வுகள் சற்று குறைக்கப்படுகின்றது. பின் சக்கரம் பள்ளங்கள், வேகத்தடைகள் மீது சென்றால் பின்னால் அமர்ந்திருப்பவரே அதிகம் பாதிக்கப்படுவார். ஆனால் பின் இருக்கை சற்று உயரமாக இருப்பதால், இந்த பிரச்சினை குறைக்கப்படுகின்றது.