பேலியகொட புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து 112 பேர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.