மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,32,112 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 58 பேர் உயிரிழந்ததன் மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3509 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 3612 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 18,28,546 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை கொரோனா தொற்றுடன் இருப்பர்களின் எண்ணிக்கை 52,902 ஆக உள்ளது.
இன்று 75,374 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1,27,47,633 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்தவர்களில் எண்ணிக்கை சதவீதம் 94.64 ஆக உள்ள நிலையில், பலியானோர் சதவீதம் 2.56 ஆக உள்ளது.
இன்று மும்பையில் 714 பேர் பாதிக்கப்பட்டள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை 2,93,436 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,116 உயிரிழந்துள்ளனர்.