நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 88 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 2 ஆயிரத்து 999 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்று உறுதியானோரில் 561 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.