கேமரூன் நாட்டின் மேற்கு நகரமான போயும்பானில் இருந்து தலைநகர் யாவுண்டாவிற்கு 70 இருக்கைகள் கொண்ட பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருக்கும்போது சாலை அருகில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக டிரைவர் பேருந்து திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

60 பேர் பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கிறிஸ்துமஸ் விழா முடித்துக் கொண்டு அல்லது புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கான சென்றவர்கள் ஆவார்கள்.